கஞ்சிபானி இம்ரானுடன் தொடர்புகளை பேணிய பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்.

கஞ்சிபானி இம்ரானுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானுடன்,  அந்தப் பிரிவின் அதிகாரிகள் சிலர் தொடர்பு வைத்துள்ளதாக மாகல்கந்தே சுதந்த தேரரால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உப பொலிஸ் பரிசோதகர்கள் மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு குறித்த மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டதாக ஊடகப்பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சர்கள் ருவன் குணசேகர கூறினார்.


Recommended For You

About the Author: ஈழவன்