
கேரளாவில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி, 121 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனோரை தேடும் பணிகளில், மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.
வெள்ளம், நிலச்சரி ஆகியவற்றில் சிக்கியே குறித்த 121 பேரும் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.