காஸ்மீர் விவகாரம் – மாணவியை கைது செய்ய வலியுறுத்தி மனு தாக்கல்.

காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லி மாணவி ஒருவரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷீத் மத்திய அரசுக்கு எதிராகவும், இராணுவத்திற்கு எதிராகவும் பொய்யான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவரை தேச துரோக சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞரான அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் மாணவி ஷீலா ரஷீத் வேண்டுமென்றே போலிச் செய்திகளை பரப்புகிறார்.

அவரை பலரும் டுவிட்டரில் பின்தொடர்கின்றனர். இந்தப் போலி செய்திகள் சர்வதேச தளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.

இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது. இவர் செய்து வருவது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124-ஏ இன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றமாகும்.

இது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை தூண்டுகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 153, 153-ஏ, 504, 505 ஆகிய பிரிவுகளின் கீழும் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2002-இன் கீழ் வகுப்புவாத பகைமைகளை ரஷீத் தூண்டி வருகிறார்.

இவரது செயல்பாடுகளை முடக்கி இவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்