பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு முக்கியம்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களே மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர்களும் உயர்ஸ்தானிகரும் இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

இதனை அடுத்து அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, புதிய தூதர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று நாடுகளும் இலங்கையுடன் சிறந்த நீண்டகால உறவைக் கொண்டுள்ளன என்றார்.

இவர்கள் மூவரும் சிறந்த சாதனைப்பெண்கள் என்றும் பெண்கள் அதிகாரத்துக்கு வருவதற்கான பெருமைமிக்க சமிக்ஞை இதுவென்றும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையின் மக்கள் தொகை 52% பெண்களைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கிறார்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக ஆடைத் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தோட்டத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், அந்நிய செலாவணியைப் பெற நாட்டிற்கு உதவுகிறார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்