காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க ஆவிகளின் உதவிய நாடிய மலேசிய பொலிஸ்.

விடுமுறைக்காக குடும்பத்துடன் மலேசியாவுக்குச் சென்ற பிரித்தானிய சிறுமி நோரா குய்ரின் காணாமல் போனநிலையில் கடந்த வாரம் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

குறித்த பிரித்தானிய சிறுமியை தங்களால் கண்டுபிடிக்க முடியாததால் மலேசிய பொலிஸார் ஆவிகளுடன் உரையாடுபவர்களின் உதவியை நாடியதாகவும், அதற்கு அடுத்த நாள் அவளது உடல் கிடைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஏற்கனவே, பொலிஸார் மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடி காணாமல்போன சிறுமியை கண்டுபிடிக்க முயற்சித்திருந்தனர். எனினும் குறித்த முயற்சி தோல்வியடைந்தது.இந்நிலையில் ஆவிகளுடன் அவர்கள் ஆவிகளுடன் பேசும் நால்வரை சந்தித்து உதவி கோரிய மலேசியப் பொலிஸார், அந்த சந்திப்பின்போது நோராவின் பெற்றோர்களையும் தங்களுடன் இருக்க வலியுறுத்தியுள்ளனர்.

ஆவிகளுடனான குறித்த கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்றதாகவும், அதன்போது நோராவை அவளது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஆவிகள் சம்மதித்ததாக ஆவிகளுடன் பேசுபவர்கள் தெரிவித்திருந்த நிலையில், மறுநாள் நோராவின் உடல் கிடைத்துவிட்டதாகவும் நெக்ரி செம்பிலான பொலிஸ் தலைமை அதிகாரி மொஹம்மட் மட் யூசூப் (Mohamad Mat Yusof) தெரிவித்துள்ளார்.

சிலர் கடவுளின் கிருபையால் நோராவின் உடல் கிடைத்ததென்று நம்பும் நிலையில், ஏனையவர்கள் அது தற்செயலாக நடந்த விடயம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், நோரா காணாமல் போனமை மற்றும் நிர்வாணமாக கண்டுபிடிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் பற்றிய கேள்விகளுக்கு மலேசிய பொலிஸாரிடம் சரியான பதில் இல்லாததால், அவர்கள் மீது கடும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன


Recommended For You

About the Author: ஈழவன்