விடுதலைப் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலகம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும் வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமைக்கு தமிழ் தலைமைகள் ஏமாற்றுகின்ற பாணியில் செயற்பட்டமை தான் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பாண்டிருப்பு பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினை தற்போது நீடித்து வருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கடந்த காலங்களில் தரம் உயர்த்த கோரி பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் தமிழ் தலைமைகள் என்று சொல்கின்றவர்கள் ஏமாற்றுகின்ற பாணியில் செயற்பட்டமை காரணமாகவே தற்போது பிரச்சினை நீடிக்கின்றது.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்தபோது பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டே வாக்களித்தனர்.

எனினும் இன்று வரையில் ஒன்றும் நடைபெறவில்லை. தற்போது ஹரீஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலகம் என்று ஒரு புரளியை தெரிவிக்கின்றார்.

இதனால் ஹரீஸ் தற்போது, விடுதலைப் புலிகளினால் பல வருடங்களுக்கு முன் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Ananya