கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள்

வவுனியா நகரப் பகுதிகளில் அண்மைய சில நாள்களாக கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் வீதிகளில் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகரில் மக்கள் நடமாடும் பகுதிகளில் அதிகளவான   கட்டாக்காலி நாய்கள் நடமாடித் திரிகின்றது.

இதனால் நகருக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் செல்லும் மக்கள் வீதிகளிலுள்ள கட்டாக்காலி நாய்களினால் விபத்துக்களையும் எதிர் நோக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்த நகரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Recommended For You

About the Author: Ananya