
நபரொருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்துள்ளார். உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் கம்பகா நிட்டம்புவ காஹடவோவிடப் பகுதியில் நடந்துள்ளது.
காஹடவோவிட குருவலான பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான நவாஸ் அப்துல் ஹைஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து பொலிஸார் மண்ணெண்ணெய் போத்தல் மற்றும், லைட்டர் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் மீன் விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இவருக்குக் கடன் தொடர்பான பிரச்சினைகள் இருந்துள்ளன.
இதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.