கோலிக்குக் காயம் !

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அதிக கவனம் பெறும் வீரராக விராட் கோலி இருக்கிறார்.

இந்திய ரசிகர்களால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகளில் அற்புதமாகச் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில்தான் தற்போது இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் ஆசிய அணிகளான பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றியைப் பதிவு செய்யவில்லை.

முதல் போட்டியில் இந்த அணிகள் தோல்வியைச் சந்தித்துள்ளன. இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளான பாகிஸ்தான் 105 ரன்களுக்கும், ஸ்ரீ லங்கா 136 ரன்களுக்கும் சுருண்டு அதிர்ச்சி கொடுத்தது.

வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட 207 ரன்களுக்கு வீழ்ந்தது. இந்தப் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பு இல்லாமல் ஒன்சைடு கேமாகவே அமைந்தது.

ஆசிய அணிகளில் வலுவான அணியாக இருப்பது இந்தியாதான். உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பிருக்கும் அணியாகவும் கருதப்படுகிறது. இதன்காரணமாக வரும் ஜூன் 5-ம் தேதி இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சவுத்தாம்ப்டனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலிக்கு எதிர்பாராதவிதமாகக் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடாமல் ஓய்வறைக்குச் சென்று விட்டார். விராட்டின் காயம் குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கோலியின் காயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கோலி களமிறங்குவார் எனத் தெரிகிறது. உலகக் கோப்பை போன்ற நெடுந்தொடர்களில் வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அது அணியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன்காரணமாகத்தான் ஐபிஎல் போட்டிகளின் போதும் உலகக் கோப்பையில் ஆடும் வீரர்கள் அணி நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து சரியாக ஓய்வு எடுக்கும் படி பிசிசிஐ அறிவுறுத்தியது.

ஐபிஎல் தொடரின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட ஜேதர் ஜாதவ் தற்போதுதான் அணிக்குத் திரும்பியுள்ளார். உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை.

விஜய் சங்கரும் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை.

இந்திய அணி வரும் ஜூன் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.


Recommended For You

About the Author: Editor