கார்த்தியின் ‘கைதி’ குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

கார்த்தி நடித்து முடித்துள்ள ‘கைதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் மிக அருமை என்றும், அவர் ஒரு ஜீனியஸ் என்பதை இந்த படத்தில் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் ‘தளபதி 64’ என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக், நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா, யோகிபாபு, பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நாயகியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது


Recommended For You

About the Author: Editor