சூப்பர்ஹிட் படத்தின் 2 பாகத்தில் விஜய்சேதுபதி- காஜல் அகர்வால்?

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘Awe’. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படம் தெலுங்கு திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் பிரசாந்த் வர்மா திட்டமிட்டுள்ளார்.

இது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் விஜய்சேதுபதி, காஜல் அகர்வால் முதல்முறையாக ஜோடியாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படம் முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்றும், முதல் பாகத்தில் ஒரே நேரத்தில் பல கதைகள் நகர்ந்த நிலையில் இந்த படத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே கதை மட்டுமே இருக்கும் என்றும் இயக்குனர் பிரசாந்த் வர்மா தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor