ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த தினேஷ் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக சன் டிவி சீரியலில் நடித்து வந்த நடிகர் கமிட்டாகியுள்ளார். இருப்பினும் தினேஷ் தான் இந்த சீரியலுக்கு செட்டானார்.

அவர் தான் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகியது குறித்து தினேஷ் கூறுகையில்,

இந்த சீரியல் மூலம் எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். பக்கத்து வீட்டு பையன் போன்று பார்த்து வருகின்றனர்.

அவர்களின் அன்புக்கு என் அன்பையே பரிசாகக் கொடுக்க நினைக்கிறேன். ஒரு நடிகனாக ‘சிவா’ கதாபாத்திரம் எனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு, நான் சீரியலில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் நான் புதிதாக எடுத்துக்கொண்ட வேலையும், அதில் எனக்கு ஏற்பட்ட வேலைச் சுமையுமே.

உங்களை மகிழ்விக்கும் கேரக்டரில் விரைவில் வருவேன் என்றும் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor