பிக்பாஸ் அடுத்த வைல்ட்கார்ட் என்ரி யார்?

பிக்பாஸ் வீட்டில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

வீட்டை விட்டு வெளியே வந்த மதுமிதா, கமல்ஹாசனிடம் பேசும்போது கூட தன்னுடைய தவறை அவர் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

உங்களுக்காக ஒரு குடும்பம் வெளியே காத்திருக்கும்போது நீங்கள் எப்படி இம்மாதிரி ஒரு முடிவை எடுக்கலாம்? என்று கமலஹாசன் எடுத்துக் கூறியும், குடும்பத்தை விட அந்த நேரத்தில் தன்னுடைய கருத்துதான் பெரிதாகத் தெரிந்தது என்று மதுமிதா விதண்டாவாதம் செய்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

அதுமட்டுமன்றி சேரன், கஸ்தூரி தவிர மற்ற யாரிடமும் நான் பேச விரும்பவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியதும் மதுமிதாவின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் இருந்த மதுமிதா வெளியேற்றப்பட்டதால் எவிக்சன் இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால் இந்த வாரம் வழக்கம்போல் எவிக்

சன் உண்டு என்பதை உறுதி செய்த கமலஹாசன், இன்று எவிக்சன் பட்டியலில் உள்ள ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள் தெரிவித்தார்

பிக்பாஸ் வீட்டில் எவிக்சன் அல்லாமல் சரவணன், மதுமிதா ஆகிய 2 பேர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டுவிட்டால் பிக்பாஸ் வீட்டில் 8 பேர் மட்டுமே இருப்பார்கள்.

இன்னும் கிட்டத்தட்ட 7 வாரம் இருக்கும் நிலையில் ஆறு வாரங்களில் 6 பேர் வெளியேற்றப்பட்டு விட்டால் இறுதிப் போட்டியில் இரண்டு பேர் மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே கண்டிப்பாக ஒருவர் அல்லது இருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வர வாய்ப்புள்ளது. அவ்வாறு உள்ளே வரும் புதிய போட்டியாளர்கள் யார்? என்ற கேள்வியே தற்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது


Recommended For You

About the Author: Editor