இறப்பதற்கு முன் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்த நடிகை

நான் இறந்த பின்னர் எனது தந்தையின் கல்லறை அருகேதான் என்னையும் அடக்கம் செய்ய வேண்டும்.

இதற்காக என் தந்தையை அடக்கம் செய்த இடத்திற்கு பக்கத்தில் உள்ள இடத்தில் எனது அடக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.

கடலோரக்கவிதைகள், புன்னகை மன்னன், உள்பட சுமார் 100 படங்களில் நடித்த நடிகை ரேகா தற்போது ஒருசில கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ரேகா, ‘என் தந்தைக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடிக்காது.

அவர் நான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டுமே பார்த்தார். ஆனாலும் அவர் என் மீதும், நான் அவர் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தோம்.

எனது தந்தை இறந்த பின்னர் கீழ்பாக்கத்தில் அவருக்காக கல்லறை எழுப்பினேன்.

அவரை அடக்கம் செய்த இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு, அந்த இடத்திற்கு பகத்தில் நான் இறந்த பிறகு என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன் என்று நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor