ரயிலுடன் மோதி யுவதி பலி

கண்டி – நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் இன்று (18) மதியம் தொடருந்தில் மோதுண்ட ஒருவர் பலியானார்.

கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டதிலே அவர் பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 20 வயதான கொத்மலை – ரம்பொடயையைச் சேர்ந்த யுவதி ஒருவரே பலியாகியுள்ளார்.


Recommended For You

About the Author: Ananya