மாத்தி யோசி

மாத்தி யோசி
____________________________________________

அன்புள்ள கணவரே,
உங்களை விட்டு நான் பிரிகிறேன் என்ற நற்செய்தியை சொல்லவே இந்த கடிதம் எழுதுகின்றேன்.

ஒரு நல்ல மனைவியாக உங்களோடு 8 வருடங்கள் குடும்பம் நடத்தியதற்கு எனக்கென்று இப்போது எதுவும் இல்லை,
அதிலும் கடைசி இரு வாரங்கள் நரகமாக இருந்தன.

உங்கள் Boss எனக்கு போன் பண்ணி நீங்கள் வேலையை விட்டு விட்டதாக சொன்னார்.

நேற்றிரவு நீங்கள் வீட்டுக்கு வந்த போது நான் அழகாக ஹேர் கட் செய்திருந்தேன்,

உங்களுக்கு பிடித்த சிக்கன் குருமா உணவு செய்திருந்தேன் மற்றும் புது இரவு உடை அணிந்திருந்தேன்.

அன்று இரவு நீங்கள் வந்து அதை சாப்பிடவும் இல்லை. கிரிக்கெட் பாத்துவிட்டு தூங்கி விட்டீர்கள், என்னைக் காதலிக்கிறேன் என்று கூட சொல்லவில்லை. என் பக்கம் திரும்பக் கூட பார்க்கவில்லை.

நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்களோ அல்லது காதலிக்கவில்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்களைப் பிரிய முடிவெடுத்து விட்டேன்.

பின் குறிப்பு: என்னைத் தேட வேண்டாம், நானும் உங்கள் உயிர் நண்பர் ஜானும் அவர் சொந்த ஊருக்கு செல்கிறோம்.

-இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி-

……………………………………….

அன்புள்ள என் முன்னாள் மனைவிக்கு,

உன் கடிதத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஏதும் இல்லை!

நாம் ஏழு, எட்டு வருடங்கள் ஒன்றாக இருந்ததையே பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

நான் கிரிக்கெட் அதிகமாக பார்க்க காரணமே உன் தொணதொணப்பு தாங்காமல் தான். ஆனால் அது ஒரு போதும் பலனளித்ததில்லை.

உன் ஹேர்கட்டை நான் கவனித்தேன் “ஆண் போல இருக்கிறாய்” என சொல்ல நினைத்தேன். ஆனால் நல்லதாக ஏதும் பேச முடியாவிட்டால் ஏதும் பேசாதே என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் அதனால் அமைதியாகி விட்டேன்..

நீ எனக்கு பிடித்தமான உணவு செய்ததாகக் கூறினாய். அனேகமாக நீ ஜானையும் என்னையும் குழப்பிக்கொண்டாய் என நினைக்கிறேன். நான் சிறுவயதிலிருந்தே குருமா சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.

உன் இரவு உடையையும் பார்த்தேன் அதில் விலை tag கூட இருந்தது அன்று தான் என்னிடம் ஜான் 2000 ரூபா வாங்கியிருந்தான். அந்த உடை விலை 1999.99 ரூபா என இருந்தது. ஆனாலும் இது தற்செயலானது எனவே நான் நம்புகிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் அப்புறமும் நாம் பேசி சரி செய்ய முடியுமென நம்பினேன்.
அதனால் தான் எனக்கு லாட்டரியில் 10 மில்லியன் டாலர் விழுந்த போது வேலையை ரிசைன் செய்து விட்டு நம் இருவருக்கும் சிங்கப்பூரிர்க்கு போவதற்கு டிக்கட்டும் வாங்கி விட்டேன்.

வீட்டுக்கு வந்து பார்த்தால் உன் கடிதம் தான் இருந்தது. எல்லாவற்றுக்குமே ஒரு காரணம் இருக்குமென நம்புகிறேன். மேலும் உன் கடிதம் கிடைத்ததால் ஜீவனாம்சமாக சல்லிக்காசு கூட தரத் தேவையில்லை என லோயர் சொன்னார்.

இறுதியாக, ஜானுடன் முழு திருப்தி தரும் வாழ்க்கை உனக்கு கிடைக்குமென இறைவனை பிரார்திக்கிறேன்.

 

Sanjjaiy Gen vktb


Recommended For You

About the Author: Ananya