சர்வதேச இந்து இளைஞர் மாநாடு கிளிநொச்சியில்.

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் 5ஆவது இந்து மாநாடும் முத்தமிழ் சங்கம் நிகழ்வும் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

கிளிநொச்சி கூட்டுறவு சபை வரை அணி நடையாகச் சென்ற நூற்றுக்கான மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டுறவு மண்டபத்தில் இந்து மாநாடு மற்றும் முத்தமிழ் விழாவை நடத்தினர்.

இந்நிகழ்வில் இந்து மத குருமார்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டதுடன், பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Recommended For You

About the Author: ஈழவன்