பாதம் பருப்பை ஏன் உணவில் சேர்க்க வேண்டும்

தினமும் 10 அல்லது 15 கிராம் பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை உண்ணும் பழக்கம் இருந்தால், ஆரோக்கியம் கூடி நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்

புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது! இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது

வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும். படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கவும். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

பாதாமில் காணப்படும் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வர விடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவற்றை தினந்தோறும் உண்டு வந்தால் ஆபத்தான நோய்களில் இருந்து நம்மைக் காத்து கொள்வதுடன், பக்கவாதம், பசியின்மை, பலவீனம், எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது

வைட்டமின் – ஈ, துத்தநாகம், சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், செலினியம், நியாசின் மற்றும் மெக்னீசியமும் இதில் இருக்கிறது. பாதாமில் உள்ள கொழுப்பு, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொழுப்பாகும். 25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70 சதவீத வைட்டமின் ஈ உள்ளது.

பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் – பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து, அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்.

பாதாம், முந்திரி போன்ற கொட்டைகளில் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, விட்டமின், மினரல் போன்றவை அடங்கியுள்ளன. அவற்றை உண்பது உணவுக் கட்டுப்பாட்டுக்குச் சமமானது’ என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டவர்களுக்குத் தினசரி 67 கிராம் அளவுக்கு பாதாம் பருப்பு போன்ற பொருட்கள் அளிக்கப்பட்டன. அந்த நேரத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும் மருந்துகளும் இவர்கள் உட்கொள்ளவில்லை, இதனால், அவர்களின் ரத்தத்தில் மொத்த கொழுப்புச் சத்தில் 5.1 சதவீதம் அளவுக்கு கொழுப்பு குறைந்திருந்தது தெரியவந்தது. ரத்தத்தில் உள்ள மோசமான ‘டிரைகிளிசிரைட் ‘ அளவு குறைந்திருந்தது.’பல்வேறு வகையான கொட்டைகளை உண்பதாலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகிறது’ என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

உடல் ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் தினமும் உணவில் இதை சேர்த்து கொள்ளலாம். இதய நோய் ஆபத்தை விளைவிக்கும் காரணிகளை அழிக்கும் சக்தி கொண்டது பாதாம். சிற்றுண்டி பதிலாக பாதாமை எடுத்துக்கொள்ளும் போது இதில் உள்ள உயர் கார்போஹைட்ரேட் தொப்பை கொழுப்பை குறைக்கும் என்று பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு கிளாரி பெர்ரிமேன் முன்னணி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்

2 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடியை, பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.1 டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் விரைவில் அதிகரிக்கும்.

பாதாம் பருப்புகளை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து, மேல் தோலினை உரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு ஏலக்காயை நுணுக்கிக் கொள்ளவும். தேவையான அளவு சீனியை எடுத்துக்கொள்ளவும். பாதாமை பொடித்து, பாலுடன் கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்து வரும் நேரத்தில் சீனியை கலந்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும். பாதாமுடன் பிஸ்தா பருப்புகளையும் பொடித்து சேர்க்கலாம்.

ஒரு பாதாம் பருப்பை மெல்லிய சீவல்களாக சீவி பாலில் சேர்க்கவும். ஏலப் பொடியைத் தூவி இறக்கவும். இதனை சூடாகவும் அருந்தலாம். ஆற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர வைத்தும் அருந்தலாம்.ய் வருவதை தடுக்கும். பொதுவாக பாதாம் பருப்பு என்பது, உணவிற்கு சுவை சேர்க்கும் பொருள் என்பது வரைதான் பலருக்கு தெரியும். ஆனால், உடலுக்கு பல நன்மைகள் செய்யும் விஷயம் நிறைய பேருக்கு தெரியாது. ஜீரண மண்டலத்திற்கு நல்லது; உடலுக்கு வலிமையும், வீரியமும் கொடுக்கும்; கொலஸ்ட்ரால் லெவலை கட்டுப்படுத்தும்; நார்ச்சத்தும், கொழுப்புச்சத்தும் கொண்டு உள்ளது; இதயத்திற்கு மிகவும் இதமானது; இதயத்தின் நண்பன் என்றே சொல்லலாம்; பாதாம் எண்ணெய் சருமத்திற்கு மிருதுவையும், புத்துணர்ச்சியையும் தரும். பாதாம் பால், வயிற்றுக்கு, சிறுநீரக பாதைக்கு, நுரையீரலுக்கு நல்லது; ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில், பாதாம் முக்கிய பங்கேற்கிறது; உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்; புற்றுநோய் வருவதை தடுக்கும்.


Recommended For You

About the Author: Ananya