மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன?

மதுமிதா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது வீக்கெண்டில் கிடைத்த ஓர் அதிர்ச்சி. அதன் காரணத்தை சீக்ரெட்டில் ரூமில் வைத்து பூட்டிவிட்டு, பூடகமான செய்திகளை மட்டும் கமல்ஹாசன் உள்ளிட்ட பிக் பாஸ் டீம் வெளியிட்டிருப்பது பெரிய பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்.

காவிரி பிரச்சினையைப் பற்றி பேசியதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்பட்ட விவாதத்தாலும், ஹவுஸ்மேட்ஸ் காட்டிய எதிர்ப்பினாலும் மதுமிதா தற்கொலை முயற்சி செய்துகொண்டார் என்ற தகவல் வைரலாகப் பரவினாலும், அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஹலோ அப்ளிகேஷன் நடத்திய ‘மக்களுக்கு மெசேஜ்’ சொல்லும் டாஸ்க்கின்போது “வருண பகவான்கூட கர்நாடகா காரரோ, இங்கேயும் கொஞ்சம் மழை கொடுக்கலாமே” என மதுமிதா கூறியதாகவும், அதற்கு பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து மதுமிதாவுக்கு எதிராக சேரன், கஸ்தூரி தவிர்த்த மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் இந்தப் பிரச்சினை பூதாகரமாக மாறியிருக்கிறது.
 “முதலில் ஆண், பெண் எனப் பிரித்தார். இப்போது மாநில பிரச்சினைகளைக் கொண்டுவருகிறார்” என சிலர் போர்க்கொடி உயர்த்தி, மதுமிதா இருக்கும் வீட்டில் இருக்க மாட்டோம் எனக் கூறியதாகவும், தனித்துவிடப்பட்ட மதுமிதா என்ன செய்வதெனத் தெரியாமல் கையை அறுத்துக்கொண்டதாகவும் தகவல்கள் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கலாம் என்பதே இப்போது விவாதமாக மாறியிருக்கிறது.
பிக் பாஸ் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது வியாழக்கிழமை இரவு மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததாகவும், அப்போதே கமல் வரவழைக்கப்பட்டதையும் கூறுகின்றனர். அதன்பின் ஒருநாள் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மதுமிதா, வெள்ளிக்கிழமை இரவு தான் கண்விழித்திருக்கிறார்.
 அப்போது மீண்டும் கமல் அழைக்கப்பட்டு, உடனடியாக மதுமிதாவை ஸ்டேஜுக்கு வரவழைத்து ஷூட்டிங்கை முடித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர். எந்த இடத்திலும் தவறு நேர்ந்துவிடக் கூடாது என 100 முறைக்கும் மேலாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 55ஆவது எபிசோட். அப்படி என்னதான் நடந்தது?
https://www.tamilarul.net/
வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளை வெள்ளிக்கிழமை ஒளிபரப்பியது பிக் பாஸ் குழு. அதில்தான் ‘ஹெலோ அப்ளிகேஷன்’ டாஸ்க்கும், கேப்டன் டாஸ்க்கும் நடைபெற்றன. கேப்டன்சி டாஸ்க் முடிந்த பிறகு ஷெரின், மதுமிதா ஆகியோர் சாதாரணமாகவே இருந்தனர். மதுமிதாவுக்கு முதல் வாழ்த்து கூறியவர் ஷெரின் தான்.
பிறகு நடைபெற்ற ஹலோ மெஸேஜ் சொல்லும் டாஸ்கில் மதுமிதா பேசியதை மட்டும் பிக் பாஸ் டீம் ஒளிபரப்பவில்லை. பொதுவாகவே, இதுபோன்ற டாஸ்க்குகளில் ஷெரினின் பகுதி தான் எடிட் செய்யப்பட்டிருக்கும். காரணம், அவருக்கு தமிழ் சரிவர பேச வராது என்பதால். ஆனால், அதில் ஷெரினின் பேச்சு இருந்தது. மதுமிதா இறுதிவரை அமைதியாகவே அங்கு அமர்ந்திருந்தார்.
https://www.tamilarul.net/
மதுமிதா தவிர மற்ற பெண்கள் அனைவரும் ஒரு டேபிளில் அமர்ந்துவிட்டதால், ஆண்கள் அமர்ந்திருந்த டேபிளில் மதுமிதா அமர்ந்திருந்தார். போட்டியைத் தொடங்கியது கவின். அவர் சாண்டியை பேச அழைத்தார்.
அதன் பிறகு வரிசையாகப் பேசிய ஆண்களில் கடைசியாகப் பேசியவர் முகேன். அவர் முடித்தபோது வனிதாவைப் பேசச் சொல்லி கேட்டார். அவர்களில் இறுதியாக கஸ்தூரி பேசியதும் அந்த டாஸ்க் முடிவு பெற்றது. இதில் எப்போது மதுமிதா பேசினார் என்பது தெரியவில்லை.
https://www.tamilarul.net/
யாருமே பேச அழைக்காததால் மதுமிதா பேசவில்லை என்பதாக முதலில் நினைக்கப்பட்டது. காரணம் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டதும், விரைவாகக் கிளம்பிய மதுமிதா லிவ்விங் ஏரியாவுக்குள் சென்றதை 54ஆவது நாளின் கடைசி சில நொடிகளில் பார்க்க முடிந்தது.
ஆனால், மதுமிதா பேசியிருக்கிறார். வியாழக்கிழமை இரவு 7.20க்குத் தொடங்கப்பட்ட ‘ஹலோ மெசேஜ்’ டாஸ்க் வரை மதுமிதா நன்றாக இருந்தார். 55ஆவது நாள் நிகழ்ச்சியில் மதுமிதாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் எனக் கமல் கூறினார். அதில் நிகழ்ச்சி இரண்டு பிரிவுகளாகக் காட்டப்பட்டது.
https://www.tamilarul.net/
முதலில், வியாழக்கிழமை அணிந்திருந்த உடையுடனே கவின் இருந்த காட்சி காட்டப்பட்டது. அதில், கவின் உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸில் சிலர் அகம் டிவி-க்கு அருகிலிருக்கும் சோபாவுக்குக் கீழே படுத்திருப்பதைக் காணமுடியும். அங்கிருந்து எழுந்து டான்ஸ் ஆடிவிட்டுச் சென்றபிறகே சாக்லேட் அடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் நடுவராக நியமிக்கப்பட்ட சாண்டி, தர்ஷன்-முகேனின் சாக்லேட்டுகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தும், தங்கள் தட்டிலிருந்து அவர்கள் சாக்லேட் எடுத்தார்கள் எனக் கூறி வனிதா பிரச்சினையைக் கிளப்பியதால் ‘வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்கடா’ எனச் சொல்லிவிட்டு வனிதா டீம் வென்றதாக அறிவித்தார்.
https://www.tamilarul.net/
அதன்பிறகு, ஓடத் தொடங்கும் காட்சிகளில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் உறக்கத்திலிருந்து எழுவது போல காட்டப்பட்டது.
இவை எதிலும் மதுமிதா இடம் பெறவில்லை. எனவே, வியாழக்கிழமை இரவே மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததும், அது ஹலோ டாஸ்க் முடிந்த சில மணி நேரங்கள் கழித்துதான் என்பதும் உறுதியாவதோடு வெள்ளிக்கிழமை மதியத்திற்குள்ளாக பிக் பாஸ் வீடு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதும் தெரிகிறது என்று கேட்டால், ‘ஒருவேளை ஆண்களை எதிர்த்ததால் அல்லது காவிரி பிரச்சினையைப் பேசியதால் மதுமிதா தற்கொலைக்கு முயன்றிருந்தால் இத்தனை சீக்கிரத்தில் பிக் பாஸ் வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்குமா?’ என்ற கேள்வியை பிக் பாஸ் வட்டாரம் முன்வைக்கிறது.
முக்கியமாக, அகம் டிவி வழியாக ஹவுஸ் மேட்ஸுடன் பேசச் சொல்லி கமல் அறிவுறுத்தியபோது ஷெரின் தான் மது என முதலில் குரல் கொடுப்பார். இதைச் சுட்டிக்காட்டி, “தர்ஷன் தன்னால் பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சியதற்கே கலங்கிப்போன ஷெரின், மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கு தான் காரணம் என அறியும்போது அவ்வளவு இயல்பாக பேச முடியுமா?” என்றும் கேள்வியெழுப்புகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவ உதவிக்கு ஆட்படுத்தப்பட்ட மதுமிதாவை முதல்வேளையாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற, வெள்ளிக்கிழமை இரவே கமல்ஹாசன் வரவழைக்கப்பட்டு சனிக்கிழமை இரவுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. கமல் எவ்வளவோ சொல்லி அழைத்துவந்தும், ஸ்டேஜுக்கு வந்த மதுமிதா என்ன பிரச்சினை நடந்தது என்பதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
 நான் செய்தது தவறு என மதுமிதா வாய்வழியாகவே வார்த்தைகளைப் பெற கமல் போராடியும், முடியாமல் போய்விட்டது. எனவே, முடிந்தளவுக்கு மதுமிதாவின் பேச்சை எடிட் செய்து, அதற்கேற்ப வீட்டில் நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் எடிட் செய்வதற்குத் தாமதமாகிவிட்டது.
அதனால்தான் சனிக்கிழமை ரிலீஸ் செய்யப்படவேண்டிய ப்ரோமோ காட்சிகளும் அடிபட்டுவிட்டன. ஆனால், அதில்கூட, 55ஆம் நாள் இரவு 11.30க்கு எடுக்கப்பட்ட காட்சியை 56ஆம் நாள் காலை 11.30 என மாற்றி எடிட் செய்து பிக் பாஸ் டீம் மாட்டிக்கொண்டது.
https://www.tamilarul.net/
இவ்வளவு ரிஸ்க் எடுக்கவேண்டிய அளவுக்கு அப்படி என்னவொரு மிகப் பெரிய பிரச்சினையை மறைக்கிறீர்கள் என்று கேட்டால், “காவிரி பிரச்சினைக்கு ஆதரவா மது பேசும்போது, தமிழ் மக்களையே நம்பி இருக்கும் கவின், வனிதா, அபிராமி, கஸ்தூரி ஆகியோரெல்லாம் எதிர்த்து பேசுவாங்களா பாஸ்” என்கிறார்கள். காத்திருப்போம். காலம் பதில் சொல்லும். இல்லையென்றால், மதுமிதாவே பதில் சொல்வார்.

Recommended For You

About the Author: Editor