இந்திய – மியான்மார் எல்லையில் நிலநடுக்கம்!

இந்திய – மியான்மார் எல்லையில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
4.7 ரிக்டர் அளவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அண்மைக்காலமாக பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor