இணையம் மூலம் புலமைப் பரிசில் கொடுப்பனவு!!

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகளை இணையம் மூலம் (Online) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக செயற்திறன் மிக்கதாகவும், மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிடைக்கக்கூடிய வகையிலும் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேபோன்று தரம் 13 வரையிலான கட்டாயக் கல்வியின் கீழ் தொழில்நுட்ப கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான கொடுப்பனவையும் இணையத்தினூடாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்டத்தின் கீழ் முதற்கட்மாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் தகவல்கள், பரீட்டையில் பொற்றுக்கொண்ட புள்ளிகள் என்பவற்றை உள்ளடக்கி புலமைப் பரிசில் கொடுப்பனவிற்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் சகல தகவல்களும் இணைய முறைக்கு அமைவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறும் மாணவர்கள் தமக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் அதற்கான உறுதிச் சீட்டுகளை (Voucher) சமர்ப்பிக்க வேண்டும்.

இதனால் நிலவிய பிரச்சினை மற்றும் தாமதங்கள் இந்த இணைய முறை மூலம் தீர்க்கப்படுகின்றது. புலமைப் பரிசிலுக்கான கொடுப்பனவு மாணவர்களின் வங்கி கணக்கிற்கு வைப்புச் செய்யப்பகின்றது.

தற்போது மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவான 500 ரூபாயை 750 ரூபாயாக அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு அலோசனை வழங்கியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor