ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்னைச் சேர்ந்த சிலரிடம் சஜித்திடம் கூறுமாறு கூறியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க எனத் தெரியவருகின்றது.

அருணா டி சொய்சாவின் ஜனநாயக தேசியவாத இயக்கத்திலிருந்து தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய ஆகியோரிடையே ஜனாதிபதி வேட்பாளராவதற்கான பூசல்கள் கிளம்பியுள்ளதனால் ஐக்கிய தேசியக் கட்சிச் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழுவிவிலிருந்து ஒருமனதாக வாக்களிக்கும் வேட்பாளரே தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்தத் தேர்வை எதிர்வரும் செப்டம்பர் இரண்டம் வாரத்திற்கு முன்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor