சீறும் மைத்திரி? நான் இருக்கும் வரை நடக்காது

நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டுவர இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

எந்தவொரு வெளிநாட்டு இராணுவத்தையும் நாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் எந்தவொரு இடத்திலும் எவருடனும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை.

நாட்டில் குழப்பமான நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டிருப்பது இந்த குறுகிய நோக்கம் கொண்ட சந்தர்ப்பவாதிகளின் போலிப் பிரச்சாரங்களின் காரணத்தினாலேயாகும்.

நாட்டுக்காக ஊடகங்களுக்கும் முக்கிய பொறுப்புள்ளது என்றும் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor