அருண் ஜெட்லி கவலைக்கிடம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கடந்த 9-ந் தேதி சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து, அவருக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர்.

தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டன.

இந்தநிலையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், ஹர்சவர்தன், விமானப்படை தளபதி தனோவா, காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் நேற்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர்.


Recommended For You

About the Author: Editor