சிறுநீர் கழிக்க முடியாமல் தவித்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

துனிசியா நாட்டில் சிறுவன் ஒருவனின் ஆணுறுப்புக்குள் இருந்த ஊசி போன்ற மர்மப்பொருளை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
துணிசியா நாட்டின் துணிஸ் என்ற பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த இரண்டு நாட்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளான். அதற்கானக் காரணத்தை பெற்றோர் கேட்டும் அவன் எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளான்.
இதையடுத்து அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அவனது பெற்றோர்.
அங்கே மருத்துவர்கள் அவனை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவனது ஆணுறுப்பில் ஊசி ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். பின்னர் அந்த சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவனது ஆணுறுப்பிற்கு எந்த பிரச்சனையிம் இல்லாமல் அந்த ஊசியை வெளியே எடுத்துள்ளனர்.
இந்த  சிகிச்சை முடிந்ததும்தான் சிறுவனால் வழக்கம்போல சிறுநீர் கழிக்க முடிந்தது. இதையடுத்து சிறுவனிடம் மனநல மருத்துவர் நடத்திய விசாரணையில் சிறுவன் சுய இன்பத்துக்காக ஊசியை அந்த இடத்தில் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளான்.
அதன் பின் அவனுக்கு பாலியல் பற்றியும் பாதுகாப்பான முறையில் சுய இன்பம் பெறுவது பற்றியும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor