Gare du Nord இல் இருந்து Aulnay-sous-Bois வரை RER B போக்குவரத்து தடை!!

இன்று ஞாயிற்றுக்கிழமை Gare du Nord (கார்-து-நோர்) தொடருந்து நிலையத்தில் இருந்து Aulnay-sous-Bois (ஓல்னே-சூ-பூவா) நிலையம் வரை பயணிக்கும் RER B சேவை இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கல் பணிகள் இடம்பெற உள்ளதால் இந்த போக்குவரத்து தடை கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக SNCF வழங்கிய தகவல்களின் படி, பயணிகள் மாற்று சேவைகளை பயன்படுத்தும் படியும்,  Stade de France / Saint-Denis ஆகிய நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தவிர கார்-து-நோர் நிலையத்தில் இருந்து RER D சேவைகளையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தண்டவாளம் மற்றும் சமிக்ஞை விளக்குகளில் மிக முக்கியமான ‘விரிவாக்கல்’ பணிகள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Le Bourget இல் இருந்து Roissy-Charles-de-Gaulle வரை பயணிக்கும் RER B சேவையினை வருடத்துக்கு 165 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor