துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை

வேலூர் மாவட்டத்தின் ஜவ்வாதுமலை பிரிவு மற்றும் மற்ற மலைப்பகுதிகளில் அடிக்கடி சாராய ரெய்டு நடத்தும் காவல்துறை, அனுமதி பெறாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்களை பிடிக்க ரெய்டு செய்வதில்லை. இதனால் அடிக்கடி நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்வது என்பது வேலூர் மாவட்டத்தில் அதிகரித்துவருகிறது.

வேலூர்  மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் 21 வயதான சக்திவேல் என்பவரை யாரோ, நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து மலைப்பகுதியிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த தகவல் அந்த கிராம மக்கள் மூலமாக போலிஸாருக்கு தகவல் சென்றது. அதன் அடிப்படையில் திம்மாம்பேட்டை போலீசார் சம்பவயிடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


கள்ளதுப்பாக்கி கொண்டு சக்திவேலை யார் சுட்டுக்கொலை செய்தது என்கிற விசாரணையை போலிஸாரும், உளவுத்துறையினரும் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இப்படி கள்ளத்துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது இந்த மாவட்டத்தில் மட்டும் ஐந்தாக இருக்கும் எனக்கூறுகின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.


Recommended For You

About the Author: Ananya