பயண திசை தெரியாமல் நாடு திரும்பிய விமானம்!

இந்தியாவிலிருந்து பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பயணதிசைக்கான விளக்கப்படம் இல்லாத காரணத்தால் நடு வான்வரை சென்று, திசை தெரியாமல் மீண்டும் நாடு திரும்பியது.

கோ-ஏர் நிறுவனத்தின் ஏ-320 ரக விமானம் ஒன்று 146 பயணிகளுடன் டெல்லியில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்டுச் சென்று நடுவானை அடைந்த பிறகே, பாங்காக் சென்றடைவதற்கான பயணதிசைக்கான விளக்கப்படம் விமானத்தின் திரையில் இணைக்கப்படாதது விமானிகளுக்குத் தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தை எவ்வாறு சென்றடைய வேண்டும், எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பது தொடர்பான தகவல்கள் பயண திசைக்கான விளக்கப்படத்தில் தான் இடம்பெற்றிருக்கும். அது இல்லாதபட்சத்தில் 146 பயணிகளின் உயிரை கேள்விக்குட்படுத்தி பயணத்தைத் தொடர்வது ஆபத்தானது என்று விமானிகள் முடிவெடுத்தனர்.

தொடர்ந்து விமானத்தை மீண்டும் திசை திருப்பி டெல்லி விமான நிலையம் அடைந்தனர். அதற்குப் பின்னர் பயணத்திசைக்கான விளக்கப்படத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் விமானம் டெல்லிக்குப் பறந்தது.

நடுவானில் குழப்பம் ஏற்பட்டு பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கிய இந்த விமானம் கோ-ஏர் நிறுவனத்தால் அண்மையில் தான் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வழித்தடங்களில் இயக்கப்படுவதற்காக வாங்கப் பட்ட இந்த விமானம் பாங்காக் வழித்தடத்தில் புதிதாக இயக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்த வழித்தடத்தில் பயணிக்கும் விமானம் பராமரிப்புப் பணிகளுக்காக சென்று விட்ட காரணத்தால் இந்த விமானம் இயக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக பயணத்திசைக்கான விளக்கப்படம் புதிய விமானத்தில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor