தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம் தற்போது வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு, சமகால அரசியல் நிலவரங்கள், எதிர்வரும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படுகின்றது.

இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் சிறிகாந்தா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை‌‌ உறுப்பினர் பிரசன்னா உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor