சட்டவிரோத மதுபானம் குறித்து அறிவிக்க அவசர இலக்கம்!!

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்புகளுக்காக மதுவரித் திணைக்களம் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய 1913 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து பொதுமக்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் தொிவித்துள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்படும் முறைப்பாடுகளின் இரகசிய தன்மை பாதுகாக்கப்படுமென்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டுசெல்லல் மற்றும் கைவசம் வைத்திருப்பது தொடா்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் தொிவித்துள்ளாா்.


Recommended For You

About the Author: Editor