துர்நாற்றம் வீசும் கழிவு நீர் வாய்க்கால்!

ஆரிய குளம் விகாரைக்கு எதிர்புறம் உள்ள பருத்தித்துறை வீதியில் கழிவு நீர் வடிந்தோடும் வாய்க்காலின் நிலமை தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வாய்க்காலில் துர்நாற்றம் வீசுவதோடு நீர் வடிந்தோட முடியாத அளவுக்கு புதர்கள். பிளாஸ்டிக் கழிவுகள் அதற்குள் கொட்டப்பட்டுள்ள நிலையில், காணப்படுகின்றது.

இதன் காரணமாக அந்த பகுதியால் போய்வருவர்களுக்கு இதனால் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளதோடு, நோய்த்தொற்று அபாயமும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

அத்துடன் மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதற்கு முன் கழிவுகள் அகற்றப்பட்டு வாய்க்கால் சுத்தப்படுத்தபடாவிடின் மக்கள் பாரிய சிக்கல்களிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே மக்கள் சுகாதாரத்தில் உரிய தரப்பு கவனம் செலுத்தி குறித்த கழிவு வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor