பங்களாதேசில் தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசம்.

பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள சாலண்டிகா குடிசைப் பகுதி ஒன்றிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கினால் வீடுகளின் கூரைகள் அமைக்கப்பட்டமை காரணமாக தீயினை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பாரிய தீ விபத்து காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வீடுகளை இழந்தவர்கள் தற்போது வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

 


Recommended For You

About the Author: ஈழவன்