மட்டக்களப்பில் வானில் பறக்கும் மர்ம பொருள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளை நிறத்தினாலான மர்மப்பொருள் வானில் பரந்துள்ளது.

வாழைச்சேனை, கிண்ணையடி, கும்புறுமூலை, ஓட்டமாவடி, மீராவோடை, மாஞ்சோலை, உட்பட பல பிரதேசங்களிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வான்பரப்பில் மர்மப்பொருள் பறந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெள்ளை நிறத்தினாலான பஞ்சு அல்லது சிலந்தி வலை போன்ற மர்மப்பொருள் வான்பரப்பில் பறப்பதோடு, சிலரது வீடுகள் மற்றும் மரங்களின் மேல் அவை காணப்படுகின்றமையால் பிரதேச மக்கள் அச்சத்துடன் குறித்த மர்மப்பொருளை அவதானித்து  வருகின்றனர்.

பஞ்சுவகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்தபோது அவை மென்மையாக காணப்படுவதாகவும் குறித்த மர்மப்பொருளில் சிறு பூச்சி இனங்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மர்மப்பொருளினை பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் கையில் எடுத்து அதனை சேகரித்து விளையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்