மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கொரோனோவால் உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி இன்று (23) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வன்னியார் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரியநேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


Recommended For You

About the Author: ஈழவன்