இரவு நேர பயணக் கட்டுப்பாடு நீக்கம்!

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரையில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.

அதேபோல் உணவகங்களின் கொள்ளளவு திறனில் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 75 பேருக்கு மேற்படாதிருக்க வேண்டும்.

மேலும், திருமண நிகழ்வுகளில் மண்டபத்தின் கொள்ளளவு திறனில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்படாதவாறு 100 பேர் வரை பங்கேற்க முடியும். வெளிப்புற திருமண ஒன்றுகூடல்களில் 150 பேர் வரை பங்கேற்கலாம். எனினும் இங்கு மது பரிமாற்றம் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருக்கும்.


Recommended For You

About the Author: ஈழவன்