தையிட்டியில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் தலைமறைவு – மனைவி வைத்தியசாலையில்

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் மாலை கணவன் – மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் போது , 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.
கத்திக்குத்து காயத்திற்கு உள்ளன மனைவியின் அவல குரல் கேட்டு , அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன் ,தலைமறைவாகி உள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்