12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்பு – 4 பேரை காணவில்லை

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், காணாமல் போன மலையேற்ற வீரர்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

லம்ககா கணவாய் பகுதியில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக அவர்கள் உயிரிழந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆறு மலையேற்ற வீரர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன நான்கு பேரை தொடர்ந்தும் தேடிவருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் உலங்கு வானுர்திகள் மூலம் அவர்களை கண்டுபிடிக்கும் பணிகளில் இந்திய விமானப் படையினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்