வெலிக்கடை சிறைச்சாலைக்குள் குழப்பம் – சிறைக்காவலர்கள் குவிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கைதிகள் தற்போது சிறை வளாகத்திற்குள் சொத்துக்களை சேதப்படுத்தி வருவதாகவும் சிறைக் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா போன்றவர்கள் 5 வருடங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்ததாகவும், சில கைதிகள் 15 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும் , எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்