பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் , நீதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெலிஹிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நகை கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கடுவலை பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்தவேளை உயிரிழந்துள்ளார்.
அந்நிலையில் பொலிசாரின் தாக்குதலால் தான் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டி இன்றைய தினம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்

Recommended For You

About the Author: ஈழவன்