எல்ல விபத்தில் தந்தை, மகன் பலி.

எல்ல – கபரகலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு பயணம் சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (வயது 35) மற்றும் மகன் (வயது 8) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் 8 மற்றும் 12 வயதுடைய இரு மகன்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்