படுத்திருந்து படம் பார்க்க வருடத்திற்கு 66 இலட்ச ரூபாய் சம்பளம்!

கட்டிலில் படுத்திருந்து படம் பார்க்கும் வேலைக்கு வருடத்திற்கு  24,000 பவுண்ஸ் ( இலங்கை மதிப்பில் சுமார் 66 லட்ச ரூபாய்) சம்பளமாகத் தருவதாக நிறுவனமொன்று அறிவித்துள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த ‘crafted beds‘ என்ற  உயர் ரக படுக்கை உற்பத்தி நிறுவனமே தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த படுக்கைகளை அளிப்பதற்காக  ‘படுக்கை ஆய்வாளர்’ என்ற வேலைக்கான இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் இப் பணிக்குத் தெரிவு செய்யப்படும் நபர்,  அந்நிறுவனத்தின் படுக்கையில் இருக்கும் சௌகரியம் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும்  வாரம் ஒரு புதிய படுக்கை அந் நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், வாரம் ஒன்றுக்கு 37.5 மணி நேரங்கள் படுக்கையில் படுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் ஆண்டுதோறும் படுத்துக் கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டிருக்கலாம் எனவும் ‘netfilx and chill’ என்ற புதிய திட்டத்தை இதற்காகவே அந்நிறுவனம் தயாரித்துள்ளதாகவும், அதற்கான செலவை அந்நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்