சிறைக் கைதிகள் SANITIZER பயன்படுத்த தடை

சிறைக் கைதிகள் SANITIZER பயன்படுத்தவதை தடை செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைகளை சுத்தம் செய்வதற்காக சவர்காரத்தை வழங்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய தேவையின் போது மாத்திரம் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கைதிகளுக்கு SANITIZER பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஈரானிய சிறைக் கைதிகள் குழு ஒன்று SANITIZER அருந்தியதில் இருவர் உயிரிழந்திருந்தனர். 10 பேர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்