ஆசிரியர்களின் போராட்டத்தால் வடக்கில் புத்திசாலிகள் அதிகரிக்கப் போகிறார்களாம்!

தெற்கில் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது, வடக்கிலுள்ள ஆசிரியர்கள்
அங்குள்ள மாணவர்களுக்கு கற்பிக்கின்றமையால் எதிர்காலத்தில் வடக்கில் புத்திசாலிகள்
அதிகரிக்கும் அதேவேளை, தெற்கில் புத்திசாலிகளுக்கு ஏற்படும் பற்றாக்குறைக்கு ஆசிரியர்களே பொறுப்பு கூற வேண்டும் என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

பலாங்கொட பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே,
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

சம்பளம் போதாது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் சம்பளம் வேண்டும் தான். அதிக சம்பளம் வேண்டுமாயின் பிரத்தியேக வகுப்புகளை நடத்த முடியாது. தற்போதைய சம்பளத்தை விட பல மடங்கு பிரத்தியேக வகுப்புகளில் ஆசிரியர்கள் உழைக்கின்றனர்.

தெற்கில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு எதிர்கால பிள்ளைகளுக்கு
கற்பிக்காவிட்டாலும் வடக்கிலுள்ள ஆசிரியர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர்.

இந்த நிலை நீடித்தால் வடக்கிலுள்ள மாணவர்கள் கல்வியில் பாரிய வெற்றியைச் சந்திப்பர். அங்குள்ள ஆசிரியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் போது, பல வருடங்களில்
படித்தவர்கள் வடக்கிலிருந்து ஆகக்கூடுதலானோர் உருவாகுவர். தெற்கில் இந்த நிலை
மோசமாகும் என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்