சாதி ரீதியாக பேசியதாக குற்றச்சாட்டு -யுவராஜ் சிங் கைதாகி பிணையில் விடுவிப்பு

சாதிய வன்மத்துடன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல் உடன் பேசியபோது, சாதி ரீதியிலான சில வார்த்தைகளை யுவராஜ் சிங் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் ஹரியானா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில், யுவராஜ் சிங்கை கைது செய்தததாகவும் சில மணி நேரத்திற்குப் பின்னர் பிணையில்  விடுவித்ததாகவும் ஹரியானாவின் ஹன்சி பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை முன்னதாக, தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக யுவராஜ் சிங் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்