உறவினர்களை கண்டு ஓடிய காதலர்கள் மின் வேலியில் சிக்கி உயிரிழப்பு!

முகப்புத்தக காதலியை சந்திக்க சென்ற காதலனும் , காதலியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரி பிட்டவல பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாத்தறை திக்வெல்ல பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞன் இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 18 வயது யுவதியுடன் முகப்புத்தகம் ஊடாக அறிமுகமாகி காதல் கொண்டுள்ளார்.
அந்நிலையில் காதலியை பார்ப்பதற்காக நேற்று இரவு மாத்தறையில் இருந்து இரத்தினபுரி பகுதியில் உள்ள யுவதியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இருவரும் இரவு நேரம் வீட்டுக்கு அருகில் நின்று கதைத்துக்கொண்டு இருந்ததை உறவினர்கள் கண்ணுற்றதால் , இருவரும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
அவ்வாறு தப்பியோடியவர்கள் இன்றைய தினம் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வயல் காணிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வயலுக்குள் காட்டு விலங்குகள் வராதவாறு , அமைக்கப்பட்டு இருந்த மின்சார வேலியில் சிக்குண்டே இருவரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் காதலர்களின் சடலத்தை பிரதே பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படித்துள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்