யாருக்காக கோத்தபாயவை சந்திக்கச் சென்றார் சித்தார்த்தன்?

தமிழ் மக்கள் பேரவையின் சமஸ்டி யாப்பு உருவாக்கத்திற்கு பங்களித்திருந்த புளொட் சித்தார்த்தன், அதேவேளை மறுபுறத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஒற்றையாட்சி யாப்பு உருவாக்கும் உப குழு ஒன்றின் தலைவராகவும் இருந்து ஒற்றையாட்சி யாப்பை உருவாக்கவும் பங்கெடுத்திருந்தார்.

தற்போதும் அவர் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கிறார்.

அந்நிலையில் சில நாட்களின் முன்னர் சித்தார்த்தன் கோத்தபாயவை சந்தித்திருந்தார்.

இச் சந்திப்பானது தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் நடைபெற்றதா? அல்லது கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றதா? அல்லது இரண்டு தரப்பின் சார்பாக சந்தித்தாரா? என்ற விமர்சனங்கள் தமிழ் மக்கள் பேரவைக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது!


Recommended For You

About the Author: Editor