18.08.2019 ராசி பலன்

மேஷம்

மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவு வார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.

கடகம்

கடகம்: காலை 10 மணி முதல் உங்களுக்குள் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

கன்னி

கன்னி: சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்: நிதானமாக யோசித்து முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங் களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு: எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப்போகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

மகரம்

மகரம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கும்பம்: காலை 10 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார் கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மீனம்

மீனம்: காலை 10 மணி முதல்ராசிக்குள் சந்திரன் நுழைவ தால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்


Recommended For You

About the Author: Editor