மனைவியை கொலை செய்துவிட்டு நூதனமாக மறைத்த இளைஞன் கைது!!

மனைவியை கொலை செய்த வழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Loiret நகரின் வடக்கு பிராந்தியமான Malesherbes இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் தீ பரவியிருந்தது.

மிக மோசமாக பரவிய தீ விபத்தை தொடர்ந்து, 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தில் அவரின் மூன்று மாத குழந்தையும், அவரது கணவரும் சில காயங்களுடன் தப்பித்திருந்தனர்.

தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளில், இந்த தீ சம்பவம் விபத்து இல்லை என தெரியவந்துள்ளது. பின்னர் மேலும் தொடரப்பட்ட விசாரணைகளில் தீ கணவரால் ஏற்படுத்தப்பட்டது எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவத்துக்கு முன்னர் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் முடிவில் மனைவியை அவர் தாக்கி கொலை செய்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையை மறைக்கவே அவர் தீ பற்றவைத்து ‘விபத்து’ போல் மாற்றம் செய்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை. கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor