கோட்டாபாயக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாம்.

தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தனது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கிடைத்த பாதுகாப்பு தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ள அவர், இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக முழு விசாரணை நடத்த அரச புலனாய்வுத் துறையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்கு இராணுவப் புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்பும் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷ வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான முறைப்பாட்டை அவர் தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்