
பூட்டானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷெரிங் லோட்டேவை சந்தித்தார்.
இந்த சந்திப்பையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து மாங்டெச்சுவில் அமைந்துள்ள நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசமுறைப் பயணமாக இன்று (சனிக்கிழமை) பூடானிற்கு சென்றார்.
பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய மோடிக்கு பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக மோடிக்கும் லோட்டேவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதுடன் மாங்டெச்சு நீர்மின் நிலையமும் திறந்துவைக்கப்பட்டது. இதையடுத்து இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக முத்திரையும் வெளியிடப்பட்டது.